கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் சிகிச்சை: சீனாவை பின்பற்றி நியூயார்க்கில் தொடங்கியது!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூயார்க் முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு பெருமளவில் வைட்டமின் C கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

சீனாவில் இந்த சிகிச்சை பலனளித்ததாக தெரியவந்ததையடுத்து நியூயார்க் மருத்துவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

தனது நோயாளிகளுக்கு 1,500 மில்லிகிராம் வைட்டமின் C கொடுக்கத் தொடங்கியுள்ளதாக Long Island மருத்துவரான Dr Andrew Weber என்பவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் C கொடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் முழுவதும் மருத்துவ சேவை வழங்கி வரும் அமைப்பான Northwell healthஇன் செய்தி தொடர்பாளரான Jason Molinet, நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் C கொடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆனால், எவ்வளவு வைட்டமின் C கொடுக்கப்படவேண்டும் என்பது நோயாளிக்கு நோயாளி மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வுஹானில் உள்ள Zhongnan மருத்துவமனையில், பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக இரத்தக்குழாய் வழியாக வைட்டமின் C கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்த சோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அது நல்ல பலன் கொடுத்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே, தற்போது நியூயார்க் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு வைட்டமின் C கொடுத்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்