கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்த புகழ்பெற்ற இந்திய வம்சாவளி சமையல் கலைஞர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

இந்திய வம்சாவளியை சேர்ந்த புகழ்பெற்ற சமையல்காரர் ஃபிலாய்ட் கார்டோஸ் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்துள்ளார்.

மும்பையில் செயல்பட்டு வரும் பம்பாய் கேன்டீன் மற்றும் O Pedro என்கிற இரண்டு பிரபலமான உணவகங்களின் இணை நிறுவனரும் புகழ்பெற்ற சமையல்காரருமான ஃபிலாய்ட் கார்டோஸ்(59), கொரோனா வைரஸ் காரணமாக நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த மார்ச் 1ம் திகதியன்று தனது மூன்றாவது முயற்சியான பம்பாய் ஸ்வீட் கடையின் திறப்பு விழாவிற்காக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.

மார்ச் 8ம் திகதி வரை இந்தியாவில் இருந்த அவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர், இந்தியாவில் இருந்தபோது தொடர்பு கொண்ட நபர்களை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்