கொரோனா தாக்கி குணமடைந்தவர்களின் இரத்தத்தை வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை! தொடரும் முயற்சி

Report Print Raju Raju in அமெரிக்கா

தொற்று நோய்கள், அம்மை நோய்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை கொரோனா நோயாளிகளுக்கும் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே பழமையான சிகிச்சை முறையாகும்.

ஏற்கனவே, தொற்று நோய், அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில் சார்ஸ், எபோலா நோய்களுக்கும் இந்த பழைய முறை சோதித்துப் பார்க்கப்பட்டது. தற்போது, கொரோனாவுக்கும் இந்த சிகிச்சை முறை சோதித்துப் பார்க்கப்பட உள்ளது.

அதாவது, கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று, குணமடைந்தவர்களின் இரத்தத்தில், அந்த வைரஸை எதிர்க்கும் பிளாஸ்மா செல்கள் நன்கு வளர்ந்திருக்கும்.

இவற்றை, குணமடைந்தவர்களின் இரத்தத்தில் இருந்து எடுத்து, புதிதாக கொரோனாவால் பாதித்தவர்களின் உடலில் செலுத்தும் போது, சிகிச்சையில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சிகிச்சை முறை ஏற்கனவே சீனாவில் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிலும் பின்பற்ற, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவர் அர்டுரோ காஸாடேவால் கூறுகையில், இந்த சிகிச்சை உறுதியாக பெரிய பலனைக் தரும் என்று சொல்ல முடியாது.

ஆனால், வரலாற்றில் இந்த சிகிச்சை முறை பலனளித்திருப்பது பெரும் நம்பிக்கையை எங்களுக்கு கொடுக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...