அமெரிக்காவின் அதிகாரத்தை அடக்கிய கொரோனா: வேறு வழியில்லாமல் சீனாவிடம் உதவிகேட்ட டிரம்ப்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

கொரோனா வைரஸ் தாக்குதலில் தொடர்ச்சியாக சீனாவை விமர்சித்த வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அந்த நாட்டின் உதவியை கோரியுள்ளார்.

கோவிட் -19 வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் இதுவரை 85000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 1300பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து துவங்கியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ், அதன் தாக்கத்தை தீவிரப்படுத்த ஆரம்பித்திலிருந்தே அமெரிக்க அதிபர் டிரம்ப் துவங்கி அவருடைய கட்சியினர் பலரும், அதனை 'சீன வைரஸ்' என கேலி செய்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

ஆனால் தற்போது அதன் தீவிரமானது அனைத்து நாடுகளையும் முந்திக்கொண்டு அமெரிக்காவில் தீவிரமடைந்து வருவதால், வேறு வழியில்லாமல் சீனாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "சீனாவின் அதிபர் ஷியுடன் ஒரு நல்ல உரையாடலை முடித்தேன். எங்கள் நாட்டின் பெரும் பகுதிகளை அழிக்கும் கொரோனா வைரஸ் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

சீனா அதிக அனுபவம் பெற்றுள்ளது மற்றும் வைரஸைப் பற்றிய வலுவான புரிதலை உருவாக்கியுள்ளது. மிகவும் மரியாதையுடன் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்." என பதிவிட்டுள்ளார்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...