அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்! நுரையீரலில் ஏற்பட்ட மாற்றம்... மருத்துவர் வெளியிட்ட வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறி இல்லாமல் இருந்த நபர் திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரின் நுரையீரலில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

இது தொடர்பான 3டி வீடியோவை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கீத் மோர்ட்மேன் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதுடன் அந்த வைரஸ் அவரின் நுரையீரலை தான் அதிகளவில் பாதிக்கிறது.

தற்போது கீத் வெளியிட்டுள்ள வீடியோவில், 59 வயதான அந்த நபர் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவரின் நுரையீரலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது தெரிகிறது.

அதாவது முழுவதும் நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் மூச்சு விட உதவ ஒரு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது.

மருத்துவர் கீத் கூறுகையில், குறித்த நோயாளிக்கு உயர் இரத்த அழுத்தம் தவிர வேறு எந்த நோயும் உடலில் கிடையாது, ஆனாலும் அவரை கொரோனா பெரியளவில் பாதித்துள்ளது.

வீடியோவில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்ட பகுதிகள் நுரையீரலின் பாதிக்கப்பட்ட மற்றும் வீக்கமடைந்த பகுதிகளைக் குறிக்கின்றன

மேலும் நோய் தொற்று எவ்வளவு விரைவாகவும் உடலுக்குள் இறங்கும் என்பதைக் காட்டுகிறது.

எனவே மக்கள் கொரோனாவரை சாதாரணமாக நினைக்காமல் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்