கொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு இரவும் பகலுமாக சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நியூயோர்க் நகரில் அது மிக வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவரான Cornelia Griggs டுவிட்டரில் தனது புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், இந்த பதிவை படிக்கும் அளவுக்கு என்னுடைய குழந்தைகளுக்கு வயது இன்னும் ஆகவில்லை, அவர்கள் குழந்தைகள்.

கொரோனாவால் நான் உயிரிப்பதன் மூலம் அவர்கள் என்னை இழக்கலாம்.

ஆனால் நான் என் பணியை கடினமாக செய்தேன் என அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அதாவது ஆபத்தான சூழலில் தான் சிகிச்சையளித்து வருவதாகவும், அதனால் தனது உயிருக்கும் எதாவது நேரலாம் என்பதையே அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவானது 90000 முறை மறு பதிவு செய்யப்பட்டு பெரியளவில் வைரலாகியுள்ளது.

தனது உயிரை பற்றியும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் அந்த பெண் மருத்துவர் ரியல் ஹீரோ எனவும் மிக தைரியமானவர் எனவும் பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்