90களில் சிறந்த பாடல்களை கொடுத்த அமெரிக்கர் 52 வயதில் கொரோனா தொற்றால் பலி!

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவின் சிறந்த பாடகர், பாடல் ஆசிரியர் Adam Schlesinger 52வயதில் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.

இவர், 1990ல் வெளியிட்ட Stacy's Mom மற்றும் Hey Julie ஆகியவை சிறந்த பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் Adam-ஐ மக்களிடம் அடையாளம் காட்டியது.

மேலும், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Crazy Ex-Girlfriend-க்காக Adam எழுதிய பாடல் சிறந்த பாடலாக தெரிவு செய்யப்பட்டது.

அவர், நேற்று காலையில், கொரோனாவால் நியூயார்க் உயிரிழந்ததாக அமெரிக்க பாடகர் சங்கம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து அது வெளியிட்டுள்ள செய்தியில், நீங்கள் அவரை ஒரு பாடகராக மட்டும் பார்த்திருப்பீர்கள். ஆனால் நாங்கள் சிறந்த மனிதர், நல்ல நண்பரை இழந்தோம் என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்