கொரோனா விவகாரம்... உலக சுகாதார அமைப்பை அச்சுறுத்தும் டிரம்ப்! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நிதி இடைநிறுத்தக்கூடும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தினந்தோறும் பேசி வரும் டிரம்ப், இன்று வெள்ளை மாளிகையில், உலக சுகாதார அமைப்பின் மீது இருக்கும் கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தினார்.

அவர், சீனாவை மையமாகக் கொண்டவையோ என்று தோன்றுகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பதிலளிப்பதில் ஒரு பயனும் இல்லை என்று கோபமாக கூறினார்.

மேலும், அவர் உலகசுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. அவர்களுக்கான பணத்தின் பெரும்பகுதியை அமெரிக்கா செலுத்துகிறது. ஆனால் அந்த அமைப்போ என்று குற்றம் சாட்டினார்,

இது குறித்து(கொரோனா வைரஸ்) அவர்கள் அறிந்திருக்க வேண்டும், நிறைய தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அறிந்திருக்கலாம், ஆனால் அவர்கள் சீனாவை மையமாக கொண்டவையோ என்று நினைக்க தோன்றுகிறது.

இதன் காரணமாக, இனி உலக சுகாதர அமைப்பிற்கு செலவழித்த பணத்தை நாங்கள் பிடிக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார். இதனால் உலகசுகாதார அமைப்பிற்கு மிகப் பெரிய நன்கொடையாளரின் பங்களிப்பு நிறுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

சீனா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸால் தங்கள் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,300-க்கும் என்று கூறுகிறது. ஆனால் அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் சீனாவில், உண்மையான இறப்பு எண்ணிக்கை 40,000 க்கும் அதிகம் என்று கூறுகிறது.

கடந்த ஜனவரி மாதம், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரியான், கொரோனா வைரஸைப் பற்றி சீனா சரியானதைச் செய்கிறது என்று கூறியிருந்தார், இப்போது வெளிப்படையான வெளிப்படைத்தன்மை இல்லாததை இப்போது நாங்கள் கண்டிருக்கிறோம் என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்