கொரோனா வைரஸை ‘வேண்டுமென்றே பரப்புகிறேன்’ என மிரட்டிய இளம்பெண்.. பயங்கரவாத அச்சுறுத்தல் கீழ் கைது

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸை வேண்டுமென்றே பரப்புவதாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோக்கள் பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெக்சாஸை சேர்ந்த 18 வயதான மராடியாகா, சமூக வலைதளமான ஸ்னாப்சாட்டில், கொரோனா வைரஸை வேண்டுமென்றே பரப்புவதாக கூறி தொடர்ச்சியான வீடியோக்கள் வெளியிட்டு அச்சுறுத்தி வந்தார்.

செவ்வாய்க்கிழமை மராடியாகாவை கைது செய்ததாக கரோல்டன் பொலிசார் தெரிவித்தனர். தனக்கு மேற்கொண்ட சோதனைியல் கொரோனா இல்லை என தெரியவந்ததாக லோரெய்ன் மராடியாகா பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 399,900 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், குறைந்தது 12,900 பேர் இறந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மராடியாகா மீது பயங்கரவாத அச்சுறுத்தல், மூன்றாம் நிலை குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டு, டென்டன் கவுண்டி சிறைக்கு மாற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவரது ஜாமினுக்கு 20,000 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மராடியாகாவுக்கு வழக்கறிஞர் இருக்கிறாரா என்பது தெளிவாக இல்லை.

அவரது ஜாமினின் நிபந்தனையாக, மரடியாகா முன்னெச்சரிக்கையாக காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட திகதியில் இருந்து 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்