கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக நியூயார்க் தீவில் தோண்டப்படும் கல்லறைகள்: ட்ரோன் கமெரா காட்சிகள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
451Shares

நியூயார்க்குக்கு சொந்தமான தீவு ஒன்றில் கைதிகள் கல்லறைகளைத் தோண்டும் காட்சிகள் ட்ரோன் கமெரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

கைதிகள் உடையணிந்த சிலர் அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டுவதைக் காண முடிகிறது.

ஒரே நாளில் நியூயார்க்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437 ஆகி, மொத்தம் 3,485 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து சவக்கிடங்குகள் நிரம்பி வழிவதால் Hart தீவில் உடல்களை அடக்கம் செய்வதற்காக குழிகள் தோண்டப்படுவதாக கருதப்படுகிறது.

மேயர் Bill de Blasio கூறும்போது, நேரடியாக Hart தீவில் உடல்களை அடக்கம் செய்வதாக தெரிவிக்காமல், நாம் தற்காலிகமாக உடல்களை அடக்கம் செய்யவேண்டியுள்ளது.

நமக்கு வரலாற்றுக் காலம் முதல் இப்படி அடக்கம் செய்வதற்கு உதவும் இடம் Hart தீவுதானே என்று கூறியுள்ளார்.

பொதுவாக, அடையாளம் தெரியாத அல்லது யாரும் உரிமை கோராத உடல்களை Hart தீவில் அடக்கம் செய்வது வழக்கம்.

ஸ்பானிஷ் ப்ளூவால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் Hart தீவில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்