கொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு! கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல், மகள்கள் அதை கண்ணீருடன் பேஸ் டைம் என்ற சமூகவலைத்தளம் மூலம் பார்த்த புகைப்படம் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை கரைய வைக்கிறது.

85 வயது மதிக்கத்தக்க Marty Evans என்ற பெண், Yuma கவுண்டியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு Tracy Dilka மற்றும் Teresa என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் Tracy Dilka அங்கிருக்கும் Weld கவுண்டியின் Colorado-வில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் Marty Evans-க்கு கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது Tracy Dilka உடன் இருந்தார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

இதையடுத்து தற்போது Marty Evans உயிரிழந்துவிட்டதால், அவருடைய மகள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து Tracy Dilka கூறுகையில், என்னுடைய அம்மாவின் உடலில் அப்படி ஒரு வெப்ப நிலையை கண்டேன். அந்த அளவிற்கு உடல் சூடாக இருந்தது. இப்போது அவர் இறந்துவிட்டார்.

(Picture: KDVR)

பயணம் செய்யக் கூடாது மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காரணம் போன்றவைகளால் அம்மாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் அவளைத் தொடவில்லை. முகமூடியுடன் அவர் விடைபெற்றார். நாங்கள் அதை லைவ் ஸ்ட்ரீம் மூலமே பார்க்க முடிந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

(Picture: KDVR)

மேலும், சமூக விலகல் மற்றும் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஆலோசனையை மக்கள் பின்பற்றும் படி கூறும் அவர், இது நீங்கள் கடைபிடிக்க தவறினால், உங்களின் தாய், தந்தை, சகோதர, சகோதரி அல்லது யாரேனும் ஒரு இழப்பு மிகப் பெரிய வலியை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்