கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிரம்புகிறது! பயமாக உள்ளது.. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப்பட நடிகை கவலை

Report Print Raju Raju in அமெரிக்கா

கொரோனா தாக்கத்தால் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நிலவும் சூழல் பயமுறுத்துகிறது என நடிகை அங்கிதா கூறியுள்ளார்.

தமிழில் லண்டன், தகதிமிதா, திரு ரங்கா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அங்கிதா.

இவர் திருமணத்திற்குப் பின் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கணவருடன் வசித்து வருகிறார்.

அவர் கூறுகையில், தற்போது மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்களும் கொரோனா நோயாளிகளை தவிர வேறு எந்த நோயாளிகளையும் கவனிப்பதில்லை.

அத்தியவாசிய உணவு பொருட்களை வாங்குவதற்கு கூட வீதியில் இறங்க முடியாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றோம்.

நியூஜெர்சியில் நிலவும் சூழல் பயமுறுத்துகிறது, அனைவரும் வீட்டிற்குள்ளேயே பத்திரமாக இருங்கள் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்