நான் கோடீஸ்வரி ஆகிவிட்டேன்! வந்த தகவலால் மகிழ்ச்சியில் துள்ளிய பெண்... அடுத்த சில நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண்ணுக்கு ஜாக்பாட் பரிசாக கோடிக்கணக்கில் பணம் மற்றும் கார் கிடைத்துள்ளது என நபர் கூறியதை நம்பிய நிலையில் அது மோசடி என தெரியவந்துள்ளது.

Ohio-வை சேர்ந்த பெண்ணுக்கு நபர் ஒருவரிடம் இருந்து போன் வந்தது.

போனில் பேசிய நபர் Sweepstakes எனப்படும் ஓன்லைன் விளையாட்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.

பின்னர் உங்களுக்கு 8.5 மில்லியன் டொலர்கள், மற்றும் வாரத்துக்கு $5,000 என வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என கூறினார்.

மேலும் சொகுசு காரும் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து தான் பெரும் கோடீஸ்வரியாக ஆகிவிட்டதாக மகிழ்ச்சியில் அப்பெண் துள்ளி குதித்துள்ளார்.

இதோடு தொண்டு செயலுக்கு நிறைய பணத்தை செலவு செய்வேன் என்றெல்லாம் பலரிடமும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த பரிசுகளை பெற சில விடயத்தை செய்ய வேண்டும் என மீண்டும் அந்த நபர் போனில் கூறியுள்ளார். அதன்படி $2,000 பணத்தை செலுத்த சொல்ல அவரும் செலுத்தியுள்ளார்.

இதோடு விசா கார்டு வாங்க $500 செலுத்தினார், மேலும் இந்த பணம் திருப்பி தரப்படும் எனவும் மர்ம நபர் உறுதியளித்தார்.

ஆனால் பின்னர் இது குறித்து விசாரித்த நிலையில் அப்பெண்ணுக்கு பரிசு எதுவும் விழவில்லை எனவும், போனில் பேசிய நபர் மோசடி பேர்வழி எனவும் தெரியவந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பெண் கோடீஸ்வரியாக விட்டதாக சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்து பின்னர் ஏமாற்றப்பட்டது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையில் குறித்த நிறுவனம் சார்பில் வெளியான அறிக்கையில், எங்கள் நிறுவனம் மூலம் பரிசு கிடைத்தால் அது இலவசமாகவே வழங்கப்படும், நாங்கள் பணம் எதுவும் வசூலிப்பது இல்லை, அதனால் மோசடி நபர்களிடம் பத்திரமாக இருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்