கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது! கருத்திலிருந்து பின்வாங்கிய அமெரிக்க முக்கிய அதிகாரி...

Report Print Abisha in அமெரிக்கா

கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற கருத்திலிருந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ பின்வாங்கியுள்ளார்.

Breitbartக்கு அளித்த பேட்டியில், கொரோனா வுகானில் தொடங்கியது என்று எங்களுக்கு தெரியும். ஆனால், எங்கிருந்து தொடங்கியது என்று எங்களுக்கு தெரியாது. வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்பதை கண்டறிய குழுகளை அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 1.5 மில்லியன் பாதிப்புகுள்ளாக்கிய கொரோனா வைரஸ்க்கான காரணம் வுகான் ஆய்வகம்தான் என்றும், அதற்கான போதுமான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என்று பாம்பியோ தெரிவித்திருந்தார்.

அதன் பின், தற்போது வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற தகவல் பொய்யானது என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோன்ற விசாரணையை முன்னெடுப்பதாக சீனா அந்த கோரிக்கையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்