திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்த இரு பெண்கள்! ஒருவரை கொன்ற மற்றொரு பெண்... நடந்தது என்ன?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.

நியூஜெர்சியை சேர்ந்தவர் Mayra Gavilanez-Alectus (48).

பெண்ணான இவரும் Rebecca Gavilanez-Alectus (32) என்ற இன்னொரு பெண்ணும் கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த நிலையில் Mayra மற்றும் Rebecca இருவரும் சேர்ந்து வசித்த அடுக்குமாடி வீட்டில் பெண்ணொருவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் படுக்கையறையில் சடலமாக கிடந்த Rebecca-வை மீட்டனர். மேலும் Mayra அங்கு இல்லாததும் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், Mayra, Rebecca-வை கனமான பொருளால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவாகியுள்ளார்.

அவரை கைது செய்த பின்னர் தான் இந்த கொலை தொடர்பில் மற்ற தகவல்கள் வெளியாகும் என கூறியுள்ளனர்.

இதனிடையில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தன்று Mayra, Rebecca குறித்து பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

அதில், நீ என் மனைவியாக கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன், எனது வாழ்க்கை முழு சிறப்பாக இருக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்