சுரீரென்ற வலியால் துடித்த இளம்பெண்... அவருக்கு தெரியாமலே கமெராவில் பதிவான உண்மை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பயிற்சி செய்வதற்காக வீட்டின் பின்புறம் சென்ற இளம்பெண் ஒருவருக்கு சுரீரென காலில் ஏதோ குத்தியது போன்ற உணர்வு ஏற்பட, வலியால் துடித்துள்ளார்.

டெக்சாசைச் சேர்ந்த Paris Montgomery என்ற அந்த இளம்பெண், ஏதோ குச்சி காலில் குத்திவிட்டது என்று எண்ண, அவரது தாயாரோ தேனீ கொட்டியிருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்.

எப்படியும் Montgomeryயை அவரது தாயார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல, மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை பாம்பு கொத்தியுள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.


நச்சு முறிவு மருந்து கொடுக்கப்பட்டபின் வீடு திரும்பியுள்ளார் Montgomery. இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், சியர் லீடரான Montgomery, பயிற்சி செய்யும்போது, கமெரா ஒன்றில் தனது பயிற்சியை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

வீடியோவை காண

அதில் அவருக்குத் தெரியாமலே அவரை பாம்பு கொத்தும் காட்சி பதிவாகியுள்ளது. அது தெரியாமல்தான் தனது காலில் குச்சி குத்திவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறார் Montgomery!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்