அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை 50 சதவீதம் குறைந்திருக்கலாம் என்று கொலம்பிய பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலைப் பெருந்தொற்றாக அறிவித்தபின், பயணங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மார்ச் 19 தொடங்கி ஏப்ரல் 3 வரை வெவ்வேறு திகதிகளில் வெவ்வேறு அமெரிக்க மாகாணங்கள் ஊரடங்கை அறிவித்தன.
ஒரு வார காலத்துக்கு முன்னதாக ஊரடங்கை அறிவித்திருந்தால் 36,000 பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்திருப்பதை தடுத்திருக்க முடியும் என்று கொலம்பியா பல்கலைக்கழ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதுவே இரண்டு வார காலத்துக்கு முன் ஊரடங்கை அமலாக்கியிருந்தால், 50% கொரோனா மரணங்களைத் தடுத்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மே 3ஆம் திகதி வரையிலான தகவல்கள் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 15.8 லட்சம் பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 95,000 பேர் இறந்துள்ளனர்.