50 ஆண்டுகள்... 11 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு சேவை செய்தவர் கொரோனாவால் மரணம்!

Report Print Basu in அமெரிக்கா

50 ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் 11 அமெரிக்க ஜனாதிபதிகளுக்காக பணியாற்றிய முன்னாள் வெள்ளை மாளிகை ஊழியர் தனது 91 வயதில் கொரோனா வைரஸால் உயிரிழந்தார்.

வில்சன் ரூஸ்வெல்ட் ஜேர்மன்ஸின் வெள்ளை மாளிகை ஊழியர் வாழ்க்கை 1957ல் ஐசனோவர் நிர்வாகத்தின் போது தொடங்கியது.

வில்சன் வெள்ளை மாளிகையில் கிளீனராக பணிபுரிந்தபோது அவரைக் கவனித்த அப்போதைய முதல் பெண்மணி ஜாக்கி கென்னட் அவருக்கு பதவி உயர்வு அளித்தார்.

பின்னர் வில்சன் சமையல்காரராக பணியாற்றினார். அவரது கடைசி நிலையில், அவர் ஒபாமா வெள்ளை மாளிகையில் maître d'-யாக பணியாற்றினார்.

வில்சன் ரூஸ்வெல்ட் ஜேர்மன்ஸின் மறைவுக்கு முன்னாள் முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்