தனிவீட்டில் வாழ்ந்து வந்த தம்பதி! சந்தேகத்தின் பேரில் வீட்டிலுள்ள freezer-ஐ திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கணவரின் சடலத்தை வீட்டு படுக்கையறையில் உள்ள freezer-க்குள் மறைத்து வைத்திருந்த பெண் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவரும் இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Missouri-ஐ சேர்ந்தவர் Barbara Watters (67). இவர் கணவர் Paul Barton உடன் தனிவீட்டில் வசித்து வந்த நிலையில் Barton கடந்த வருடம் உயிரிழந்தார்.

ஆனால் கணவர் இறப்பு குறித்து வெளியில் சொல்லாத Barbara சடலத்தை வீட்டு படுக்கையறையில் உள்ள freezer-ல் மறைத்து வைத்தார்.

சில மாதங்கள் கழித்து கடந்த நவம்பரில் சந்தேகத்தின் பேரில் பொலிசார் Barbara வீட்டுக்கு சென்று freezerஐ திறந்து பார்த்த போது உள்ளே Barton சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இந்த வழக்கில் Barbara கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அப்போது அவர் கூறுகையில், என் கணவர் Lou Gehrig என்ற நோய் பாதிப்பில் உயிரிழந்தார்.

அவரின் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளை ஆராய்ச்சிக்காக மருத்துவர்கள் எடுத்து கொள்வார்கள் என பயந்தே சடலத்தை வீட்டில் வைத்தேன் என கூறினார்.

இதனிடையில் Barton-ன் சடலம் இன்னும் அவர் மனைவி Barbara விடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து சடலத்தை ஒப்படைத்து தனக்கு உணர்ச்சி ரீதியாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு செலுத்த நீதிமன்றத்தை Barbara நாடியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்