கொரோனா வேளையில் பள்ளியில் நடத்தப்பட்ட நீச்சல் கொண்டாட்டம்.. சமூக பரவலாகிய தொற்று...

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவின், ஆர்கன்சாஸி மாகாணத்தில் நீச்சல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உயர்நிலைப் பள்ளில் நடத்தப்பட்ட நீச்சல் கொண்டாட்டத்தில் இது நடந்துள்ளதாகவும், அவர்கள் இளமையாக இருப்பதால் நான்றாக இருப்பதாக நம்புவதாக ஆர்க்சாஸி மாகாண ஆளுநர், ஹட்சின்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த கூடுதல் விவரங்களை கூற ஆளுநர் மறுத்துவிட்டார். ஆனால், இதை சரியாக கையாள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்காவில் தளர்த்தப்படு வரும் ஊரடங்கால் தொடர்ந்து சமூக பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை அமெரிக்காவில் 1,666,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 98,683பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்