கருப்பினத்தவர் கழுத்தில் முழங்காலை அழுத்தி கொன்ற பொலிசார் பிரச்சினையில் எதிர்பாராத திருப்பம்: விவாகரத்து கோரினார் மனைவி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெரும் வன்முறை வெடிக்கக் காரணமான பொலிசாரின் தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சினை வெடித்துள்ளது.

George Floyd என்ற கருப்பினத்தவரின் கழுத்தில் முழங்காலை வைத்து 8 நிமிடங்கள் 46 விநாடிகள் அழுத்தியுள்ளார் பொலிசாரான Derek Chauvin (44). பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார் George.

Georgeஇன் மரணம் அமெரிக்காவையே குலுக்கியது. எதிர்ப்புப் போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன.

மக்களின் கொந்தளிப்பைத் தாங்க இயலாமல் Derek கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எதிர்பாராத ஒரு விடயம் Derekஇன் தனிப்பட்ட வாழ்வையும் கலங்கடித்துள்ளது.

ஆம், அவரது மனைவியான Kellie Chauvin தனது கணவரை விவாகரத்து செய்வதாக அவரது சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

Mrs. Minnesota அழகியான Kellie, Georgeஇன் மரணம் தனக்கு கடுமையான அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் அன்பிற்குரியவர்களுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்