கருப்பினத்தவரின் கழுத்தை மிதித்து கொன்ற அதிகாரி! நீங்கள் தனியாக இல்லை என கூகுள் தமிழன் சுந்தர் பிச்சை கண்டனம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மின்னசோட்டா நகர பொலிஸ் அதிகாரி டேரிக் சாவின், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரைக் கையில் விலங்கு பூட்டி, கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்திருந்தார்.

தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் கூறிய பின்பும், டேரிக் சாவின் தொடர்ந்து அவரின் கழுத்தை மிதித்ததால் ஜார்ஜ் உயிரிழந்தார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொடூரமாக கொலை செய்யப்பட்டதையடுத்து கொதித்து போன மக்கள் அமெரிக்காவின் 40-க்கும்ம மேற்பட்ட நகரங்களில் கடந்த இரு நாட்களாக கிளர்ந்தெழுந்து போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த சம்பவத்துக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழருமான சுந்தர் பிச்சையும் ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு கண்டனத்தையும், அமெரிக்க ஆப்பிரிக்க மக்களுக்காக இரக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில், அமெரிக்காவின் கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனத்தின் ஹோம்பேஜ்கள் மூலம் கறுப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும் இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட், பிரயோன்னா டெய்லர், அகமது அர்பெரி, உள்ளி்ட்டோருக்கும், வலுவாக ஆதரவு குரல் எழுப்பமுடியாதவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து ஆதரவு தெரிவிக்கிறோம். யாரெல்லாம் துக்கமாகவும், கோபமாகவும் , அச்சமாகவும், வேதனையுடனும் இருக்கிறார்களோ அவர்கள் தனியாக இல்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்