அந்த மனுஷனுடைய பணத்திலிருந்து எனக்கு ஒரு காசு கூட ஜீவனாம்சம் வேண்டாம்: கருப்பினத்தவரை கொன்ற பொலிசாரின் மனைவி அதிரடி

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கருப்பினத்தவரான ஜார்ஜை கழுத்தில் முழங்காலை அழுத்தி கொலை செய்த பொலிசாரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள அவரது மனைவி, ஜீவனாம்சமாக அவரது பணத்திலிருந்து தனக்கு ஒரு காசு கூட வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இத்தனைக்கும் Derek Chauvin என்னும் அந்த பொலிசாரின் மனைவியாகிய Kellie Chauvin (45) வேலை எதுவும் செய்யவில்லை.

அத்துடன், அவரது முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பெரிய பையன்களும் அவருக்கு இருக்கிறார்கள்.

இருந்தும், தனக்கு Derekஇடமிருந்து ஜீவனாம்சம் தேவை இல்லை என Kellie தெரிவித்துவிட்டார்.

Kellie, லாவோஸ் நாட்டிலிருந்து குழந்தை அகதியாக அமெரிக்காவுக்கு வந்தவராவார்.

முன்னாள் மிஸ். மின்னசோட்டா அழகியான Kellie, Hennepin மருத்துவமனை ஒன்றில் எக்ஸ் ரே துறையில் பணியாற்றியவராவார்.

அங்கு Derek கைதி ஒருவரை அழைத்து வரும்போது, Kellieயிடம் காதலைச் சொல்லியிருக்கிறார்.

அதே மருத்துவமனையில்தான் தற்போது ஜார்ஜ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

எந்த மின்னசோட்டாவில் Derekஐ மணந்தாரோ, அதே மின்னசோட்டாவிலுள்ள நீதிமன்றம் ஒன்றில்தான் தற்போது Kellie விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஜார்ஜின் மரணத்தால் அவமானமாக உணர்ந்த Kellie, சில நாட்கள் அமைதி காத்த நிலையில், தான் உயிரிழந்த ஜார்ஜின் குடும்பத்துக்காக இரக்கப்படுகிறேனே அன்றி தனது கணவருக்காக அல்ல என அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்