கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த பெண் முதன் முறையாக கண்ணீரோடு விளக்கும் காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவரை பொலிசார் முழங்காலால் அழுத்தி கொன்ற சம்பவத்தின் வீடியோவை நான் தான் எடுத்தேன் என்று பெண் ஒருவர் கண்ணீர் மல்க அங்கிருக்கும் தெருவோன்றில் பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Minnesota-வின் Minnea பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் George Floyd என்ற கருப்பினத்தவரை கீழே வைத்து, கழுத்தில் மண்டியிட்டு அவரை கை விலங்குகளால் கடுப்படுத்த முயன்ற போது, அந்த கருப்பினத்தவர் என்னால் மூச்சு விட முடியவில்லை, என்னை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சினார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்க, George Floyd இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. இதனால் இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு, அமெரிக்காவில் போராட்டத்தை ஏற்படுத்தியது.

அதன் பின் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். கருப்பினத்தவர் மரணம் குறித்து டிரம்பின் கவலையில்லாத பதில் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மட்டுமின்றி George Floyd-வுக்கு ஆதரவாக பிரித்தானியா போன்ற நாடுகளிலும் அங்கிருக்கும் அமெரிக்காவின் தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

George Floyd-ஐ அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான Derek Chauvin என்ற அதிகாரி தான் கழுத்தில் மண்டியிட்டு கொலை செய்ததாக கூறப்படுவதால், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்காவையே புரட்டி போட்டு வரும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த Darnella Frazier என்ற பெண் அன்றைய் தினம் என்ன நடந்தது என்பது குறித்து கூறியுள்ளார்.

அவர் இந்த சம்பவம் நடத்த அடுத்த நாள், இது குறித்து அங்கிருக்கும் தெரு ஒன்றில் George Floyd-வின் மரணம் குறித்து நடைபெறும் போராட்டத்திற்கு இடையில் பலரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க அவர் வேதனையுடன் அதை விளக்குகிறார்.

அதில், நான் அந்த மனிதன் இறப்பதை பார்த்தேன். அதை வீடியோவாக எடுத்தேன். அதை அன்றிரவு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டேன். அது வைரலானது.

பலரும் இந்த வீடியோவை பார்த்த பின் அந்த வீடியோ எடுத்த நபர் எப்படி இருந்தார் என்பது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால், நான் அதை எப்படி கூறுவேன், மிகவும் வேதனையாக இருந்தது. நானும் என் உறவினர் ஒருவர் இங்கிருக்கும் கடை ஒன்றிற்கு வந்தோம். அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது. அவர் கீழே விழுந்து கிடந்தார்.

உடனே நான் என்ன நடக்கிறது என்பதை அறிய நினைத்தேன், உடனடியாக கமெராவை ஆன் செய்தேன். அந்த மனிதனால் மூச்சு விட முடியவில்லை, அவர் என்னால் மூச்சுவிட முடியவில்லை, மூச்சுவிடமுடியவில்லை என்று கெஞ்சினார்.

ஆனால் அவனை கொன்றுவிட்டார்கள். நான் ஐந்து அடி தூரத்தில் இருந்தேன். அதிர்ச்சியாக இருந்தது என்று வேதனையுடன் கூறி முடித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்