கருப்பினத்தவரின் இறுதிச்சடங்கிற்கான செலவை கொடுக்க முன் வந்துள்ள பிரபலம்! ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவே கருப்பினத்தவர் ஒருவரின் மரணத்தால், கலவர பூமியாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த கருப்பினத்தவரின் இறுதிச்சடங்கிற்கு தேவையான செலவை ஏற்க பிரபல குத்துச் சண்டை வீரர் பிலாய்ட் மேவெதர் ஜார்ஜ் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் George Floyd என்ற கருப்பினத்தவர் பொலிசார் ஒருவரால் கொலை செய்யப்பட்டதால், நாட்டில் சட்டம் ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவரின் மரணா அமெரிக்கா முழுவதும் மிகப் பெரிய எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சுமார் 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தியது.

இதற்கிடையில் கடந்த 1-ஆம் திகதி George Floyd மரணம் குறித்து இரண்டு தனித் தனி பிரேத பரிசோதனைகளின் முடிவுகள் வெளியானது.

இது கொலை என்று கூறப்படுவதால், நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான Derek Chauvin மூன்றாம் நிலை கொலை மற்றும் இரண்டாம் நிலை மனித படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்ற மூன்று பொலிசார் மீது எந்த ஒரு குற்றம் சாட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகசாம்பியனான பிரபல குத்துச்சண்டை வீரரான Floyd Mayweather அவர்கள், இறந்த கருப்பினத்தவர் George Floyd-ன் இறுதிச்சடங்கிற்கு தேவையான செலவுகளை செய்ய முன் வந்துள்ளதாகவும், இதற்கு George Floyd-ன் குடும்பத்தார் ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்