கருப்பின நபரின் மரணத்தால் கதி கலங்கி நிற்கும் அமெரிக்கா! போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசாரின் புகைப்படங்கள்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பின நபரின் மரணத்தில் ஆங்காங்கே போராட்டம் வெடித்து வரும் நிலையில், பொலிசார் போராட்டக்காரர்கள் முன்பு மண்டியிட்டது மட்டுமின்றி, அவர்களை அரவணைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 25-ஆம் திகதி மினியா பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கையால் George Floyd என்ற 46 வயது நபர் உயிரிழந்ததால், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், இதற்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால், இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கிடையே பல இடங்களில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இதற்கிடையில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் போராட்டக்காரர்களை கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலமும், அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலமும், துக்கத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

image Credit-cnn

அதில், ஜார்ஜியாவின் அட்லாண்டாவில், கடந்த திங்கட் கிழமை Centennial ஒலிம்பிக் பூங்கா அருகே நடந்த போராட்டத்தின் போது கேடயங்களை வைத்திருந்த பொலிஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன் மண்டியிட்டனர்.

அதே போன்று Denver காவல்துறைத் தலைவர் Paul Pazen அதே நாளிடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து காணப்பட்டார்.

image Credit-cnn

மேலும் அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலின் போது, ஏராளமான பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

ஆனால் அதை எல்லாம் பொலிஸ் அதிகாரிகள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகளை திரும்பப் பாதுகாக்க ஆர்வமாக உள்ளதாக அவர்கள் கூறியதாக Paul Pazen தெரிவித்துள்ளார்.

image Credit-cnn

மற்றொரு புகைப்படத்தில், கேஸ் மாஸ்க், ஹெல்மெட் மற்றும் உடுப்பு அணிந்த ஒரு பொலிஸ் அதிகாரி தெற்கு நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் நான்காவது நாளின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரரை அரவணைத்துக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

நியூயார்க்கில், நியூயார்க் நகர காவல்துறைத் துறைத் தலைவர் டெரன்ஸ் மோனஹான் திங்களன்று தனது நகரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரரைத் தழுவினார்.

மேற்கு கடற்கரையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வான் நியூஸ் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது Cre8 The Change-ன் எதிர்ப்பாளர் கெவின் வெல்பெக் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரியுடன் கைகுலுக்கினார்.

image Credit-cnn

குறைந்தது இரண்டு அதிகாரிகள் திங்களன்று பிரிஸ்டல் வழியாக அணிவகுத்துச் சென்றபோது ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்தனர்.

image Credit-cnn

Bristol பொலிஸ் அதிகாரி Nick Travisano சக அதிகாரி Chris Bird-வுடன் அணிவகுப்பில் இணைந்தபோது ஒரு ஆர்ப்பாட்டக்காரரால் கட்டிப்பிடிக்கப்பட்டார்கள்.

image Credit-cnn

George Floyd கொல்லப்பட்ட மாநிலமான மினசோட்டாவில், ஒரு அதிகாரி மற்றும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் புSt. Paul-ல் நடந்த போராட்டத்தின் போது உணர்ச்சிபூர்வமாக அரவணைத்ததை பார்க்க முடிந்தது.

image Credit-cnn

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்