பிளாய்டின் உடலை அடக்கம் செய்வதற்கு முன் இது நடக்க வேண்டும்! குடும்ப வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்

Report Print Basu in அமெரிக்கா

ஜோர்ஜ் ஃபிலாய்ட் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு அவரது மரணம் தொடர்புடைய மற்ற மூன்று அதிகாரிகளும் குற்றம் சாட்டப்படுவார் என்று தான் எதிர்பார்க்கிறேன் என ஜோர்ஜ் ஃபிலாய்டின் குடும்ப வழக்கறிஞரான பென் க்ரம்ப் கூறினார்.

கைது செய்யப்பட்டபோது மினியாபோலிஸ் அதிகாரிகளால் அவரது கழுத்து மற்றும் பின்புறம் நெறிக்கப்பட்டபோது, தொடர் அழுத்தத்தால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துவிட்டார் என்று சுயாதீன பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளாய்டின் கழுத்தில் முழங்காலுடன் படமாக்கப்பட்ட முன்னாள் அதிகாரி டெரெக் சௌவின் மட்டுமல்ல, சம்பவயிடத்தில் இருந்த மற்ற அதிகாரிகளும் அவரது மரணத்திற்கு பங்களித்தனர் என பிரேத பரிசோதனை முடிவுகள் பரிந்துரைக்கிறது என வழக்கறிஞர் பென் க்ரம்ப் குறிப்பிட்டார்.

ஃபிளாய்டின் கழுத்தில் முழங்காலில் நெறித்த முன்னாள் அதிகாரி சௌவின் மீது மூன்றாம் நிலை கொலை குற்றச்சாட்டே சுமத்தப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் ஃபிளாய்டின் கொடூரமான கொலையில் பங்கேற்றதற்காக அவர்கள் அனைவருக்கும் ஏதேனும் கொடூரமான கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று க்ரம்ப் கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்