அப்பா இந்த உலகத்தை மாற்றிவிட்டார்: ஜார்ஜ் ஃபிளாய்டின் 6 வயது மகள் நெகிழ்ச்சி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் 6 வயது மகள், தமது தந்தை இந்த உலகத்தை மாற்றிவிட்டதாக நெகிழ்ந்துள்ளார்.

புதனன்று காலை ஊடக நிகழ்ச்சி ஒன்றில் தாயார் ரோக்ஸி வாஷிங்டனுடன் கலந்து கொண்ட சிறுமி கியானா,

புன்னகை மாறாத முகத்துடன், தந்தையுடன் ஒன்றாக விளையாடும் தருணங்களை இழப்பதாக தெரிவித்துள்ளார்.

பெரியவளானதும், மருத்துவரான வேண்டும் என கூறிய சிறுமி கியானா, ஏழைகளுக்கு உதவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தந்தை தற்போது தங்களுடன் இல்லாதது வருத்தமாக இருப்பதாக கூறிய கியானா, அவர் தம்முடன் மட்டுமே விளையாடுவார் என்றார்.

தமது தந்தை அமெரிக்க பொலிசாரால் கொல்லப்பட்டது தெரியாமல், அவர் உலகத்தை மாற்றிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முந்தைய நாள் ஊடகங்களிடம் பேசிய ரோக்ஸி, தனது இரு பிள்ளைகளில் கியானா மீதே ஜார்ஜ் அதிக பாசமாக இருந்தார் என்றார்.

தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த காவலர் ஜார்ஜ் கழுத்தில் காலால் அமிழ்த்துவதை வீடியோவில் பார்த்து, தந்தைக்கு உதவ தாம் அந்த இடத்தில் இல்லாமல் போய்விட்டேன் என கூறுவதாக ரோக்ஸி தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் எவ்வாறு இறந்தார் என்பது கியானாவுக்கு முழுவதுமாக தெரியாது என கூறும் ரோக்ஸி, மூச்சுவிட முடியாததாலையே ஜார்ஜ் மரணமடைந்தார் என நம்பவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்