கருப்பினத்தவர் ஜார்ஜ் மரணத்திற்கு என்ன காரணம்? பொலிசாருக்கு தடை? வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் பொலிசாரால் கொல்லப்பட்ட நிலையில், மினிபொலிஸ் அதிகாரிகள் கழுத்தை கையால் இறுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Minneapolis அதிகாரிகளில் ஒருவரால் கருப்பினத்தவர் George Floyd(46) கொல்லப்பட்டார்.

இவரை பொலிசார் கீழே தள்ளி, அதன் பின் அவரின் கழுத்துப் பகுதியில் முழுங்காலை வைத்து அழுத்தியதன் காரணமாக, அவர் மூச்சுவிட முடியவில்லை என்று கெஞ்சுகிறார், ஆனாலும் பொலிசார் மிருகத்தனமாக நடந்து கொண்டதால், அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டம் வலுவடைந்தது.

George Floyd-ன் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று போராட்டம் இப்போது வரை நடைபெற்று வருகிறது.

George Floyd-க்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களில் ஒருவரான Michael Baden, அவர் மூச்சுத் திணறல் அதாவது mechanical asphyxia காரணமாகவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அவரின், மரணம் கழுத்து மற்றும் முதுகில் அதிகாரிகளின் முழங்கால்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஏற்பட்டது.

George Floyd (Image: Internet Unknown)

இதனால் அவரின் உடல் ஆக்ஸிஜனை இழந்தது. அதன் பின், அது மூளைக்கு இரத்த ஓட்டம் செல்ல முடியாமல் வழிவகுத்தது.

இதனால் அவரின் மரணம் குறித்து மக்கள் சம்பவத்தை கண்ட போது என்ன கூறினார்களோ, அது இந்த பிரேதபரிசோதனையில் ஒத்துப் போனது.

சரியாக சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் கண்டது மக்கள் பார்த்தவற்றுடன் ஒத்துப்போகிறது. மரணத்திற்கு காரணமாக வேறு எந்த சுகாதார பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் George Floyd மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு பல நிமிடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக முதலில் இவரின் மரணத்திற்கு காரணமான நான்கு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான Chauvin மூன்றாம் நிலை கொலையில் இருந்து, இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டது. இவர் மட்டுமின்றி அவர் அப்படி நடந்து போது, வேடிக்கை பார்த்த மற்ற நான்கு அதிகாரிகளும் வழக்கை எதிர் கொண்டு வருகின்றனர்.

Chauvin-mirror.co.uk

இந்நிலையில் George Floyd மரணத்திற்கு காரணம் Minneapolis அதிகாரிகள் என்பதால், தற்போது,Minneapolis அதிகாரிகள், chokeholds, அதாவது கழுத்தை இறுக்கப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மினசோட்டா மனித உரிமைகள் திணைக்களம் மற்றும் பேச்சுவார்த்தையாளர்கள் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அடுத்து, இது அதிகாரிகள் கழுத்து கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்