கொரோனாவுக்கான முக்கிய மருந்து இனி உலக நாடுகளுக்கு இல்லை: அமெரிக்காவின் இரக்கமற்ற செயல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

கொரோனாவுக்கான அதிமுக்கிய மருந்தாக கருதப்படும் ரெமெடிசிவிர் அடுத்த 3 மாதங்களுக்கான மொத்த தயாரிப்பையும் அமெரிக்கா கைப்பற்ரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gilead என்ற நிறுவனம் கொரோனாவுக்கான அதிமுக்கிய மருந்தாக கருதப்படும் ரெமெடிசிவிர் என்ற மருந்தை பொது விநியோகத்திற்காக தயாரித்து வருகிறது.

ஜூலை மாதத்தில் முதன் முதலாக வெளியாகவிருக்கும் இந்த மருந்தை தற்போது அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

அதாவது அடுத்த 3 மாத காலங்களில் குறித்த நிறுவனம் தயாரிக்கும் மொத்த மருந்தும், 500,000 அளவு என கூறப்படுகிறது, அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் எஞ்சிய உலக நாடுகள் மேலும் மூன்று மாத காலம், கொரோனா மருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்த முடிவை அந்நாட்டில் பரவலாக வரவேற்கப்பட்டு வந்தாலும், மிக கடுமையாக பாதிப்புக்கு உள்ளான நாடுகள் மேலும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த முடிவு ஐரோப்பியாவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

ரெமெடிசிவிர் தயாரிக்கும் உரிமையை Gilead என்ற நிறுவனம் பெற்றுள்ளதால், வேறு நிறுவனங்கள் தயாரிக்க முடியாத சூழலும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த இரக்கமற்ற செயலுக்கு பல மட்டத்தில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

6 முறை பயன்படுத்தும் ரெமெடிசிவிர் மருந்துக்கு நோயாளிகளிடம் இருந்து சுமார் 3,200 டொலர் கட்டணமாக வசூலிக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்