காதலனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியில் சென்ற பெண்ணுக்கு கிடைத்துள்ள பெரிய அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் தனது காதலனுடன் வாக்குவாதம் செய்து சண்டை போட்டபின்னர் இளம்பெண்ணுக்கு பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Virginia-வை சேர்ந்தவர் Chyanne Creel. இவருக்கு லொட்டரியில் $177,777 பரிசு விழுந்துள்ளது.

இவருக்கு பரிசு விழுந்த சூழலே வித்தியாசமாக அமைந்துள்ளது.

Chyanne கூறுகையில், எனக்கும் என் காதலன் Joshuaவுக்கு இடையே சின்ன விடயத்துக்காக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிலிருந்து விடுபட காரில் வெளியில் செல்ல முடிவெடுத்து இருவரும் சென்றோம்.

வழியில் காருக்கு கேஸ் நிரப்ப சென்ற போது அங்கு விற்கபட்ட லொட்டரி சீட்டுகளை வாங்குமாறு என் காதலனிடம் கூறினேன்.

நாங்கள் எதிர்பாராத விதமாக அந்த லொட்டரிக்கு $177,777 ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.

பரிசு விழுந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, மேலும் இனி, நானும் Joshuaம் வாக்குவாதம் செய்யமாட்டோம் என உறுதி கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்