கணவனிடம் இருந்து மனைவியை அடித்து இழுத்து சென்ற கடல் அலை! அதன் பின் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் புது மண தம்பதியினர் வித்தியாசமான புகைப்படத்திற்காக கடல் அலையில் நின்று புகைப்படம் எடுத்த போது, எதிர்பார்தவிதமாக மனைவியை கடல் அலை இழுத்துச் சென்ற வீடியோ காட்சி வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லகுனா கடற்கரை, போட்டோஷூட்கள் அதிகம் நடைபெறும் பகுதி ஆகும்.

இங்கிருக்கும் டிரசர் ஐஸ்லாண்ட் கடற்கரை பகுதியில், பெரும்பாலான படங்களின் சூட்டிங்குகள், திருமண போட்டோஷூட்கள் போன்றவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

அதில், புதிதாக திருமணம் ஆகும் தம்பதியினர் ஒரு படி மேலே சென்று, தங்களது வெட்டிங் போட்டோஷூட்டை கடலில் சென்று நடத்துகின்றனர்.

அந்த வகையில் தற்போது புதுமணத்தம்பதியினர் கடலில் நின்று புகைப்படம் எடுத்த போது, திடீரென்று எழுந்த ராட்சத அலை, அலை அவர்களை இழுத்துச் சென்றது.

இந்த ராட்சத அலைகளை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். பின் அவர்கள் உதவுமாறு கூக்குரல் எழுப்பியதையவுடுத்து அவர்களை உயிர்காக்கும் படையினர் மீட்டுள்ளனர்.

இந்த மீட்புநடவடிக்கையின்போது, அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று லாஸ்ஏஞ்சல்சிஸிலிருந்து வெளியாகும் ஏபிசி7 பத்திரிகையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்