வெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி

Report Print Basu in அமெரிக்கா
571Shares

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.

நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) நிறுவனம், விதிகளை பின்பற்றாவிட்டால் மாணவர்கள் நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார்கள், மேலும் அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு கணிசமான வருவாயாக உள்ளனர், ஏனெனில் பலர் முழு தொகையையும் செலுத்துகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்