இறுதிச்சடங்கு நடக்கும் கல்லறையில் கூடியிருந்த மக்கள்! உடல் புதைக்கப்பட்ட போது நடந்த எதிர்பாராத பகீர் சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா
2209Shares

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் புதைக்கப்பட்ட போது அந்த கல்லறைக்குள் புகுந்த நபர் துப்பாக்கியால் சுட்டு, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி நடந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கல்லறையில் கொலை செய்யப்பட்ட நபரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது.

அப்போது கை துப்பாக்கியுடன் அங்கு நுழைந்த Elton Stevenson என்பவர் கல்லறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

அப்போது, உனக்கு தகுதியான விடயத்தை தான் நீ பெற்றுள்ளாய் என Elton கத்தினார்.

இதை பார்த்து இறந்தவருக்கு துக்கம் அனுசரிக்க வந்த நபர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டிய Elton பின்னர் அங்கிருந்து ஓடினார்.

ஆனால் பொலிசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், பிரபலமான பகுதியில் அதுவும் கல்லறைக்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததை பொறுத்து கொள்ள முடியாது, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்