கொரோனா என்று ஒன்று கிடையவே கிடையாது... எல்லாம் வெறும் ஸ்டண்ட்: அமெரிக்கருக்கு ஏற்பட்ட முடிவு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கொரோனா ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கும்போதும் மாஸ்க் அணிய மறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஹீரோவாக எண்ணி அவரைப் போலவே மாஸ்க அணிய மறுத்துவரும் கூட்டம் ஒன்று அமெரிக்காவில் உள்ளது.

அவரே இப்போது மாஸ்க் அணியத்துவங்கிவிட்ட நிலையில், ட்ரம்பை குருட்டுத்தனமாக பின்பற்றிய ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஒஹையோவைச் சேர்ந்த Richard Rose (37), ஒரு தீவிர ட்ரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரரான Richard, சமூக ஊடகங்களில் கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட், என்று கூறிவந்தார்.

சமூக ஊடக பிரியரான Richard, ஏப்ரல் 28 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த இடுகை ஒன்றில், நான் மாஸ்க் எல்லாம் வாங்க மாட்டேன், கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று எழுதியிருந்தார்.

ஆனால், ஜூலை 1ஆம் திகதி அன்று அவருக்கு உடல் நலமில்லாமல் போகவே, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார் Richard.

பரிசோதனையின் முடிவுகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தன. ட்ரம்பை ஆஹா ஓஹோவென புகழும் Richard, ஜூலை 4ஆம் திகதி பரிதாபமாக கொரோனாவுக்கு பலியானார்.

ட்ரம்பை பின்பற்றி உயிர்விட்ட முதல் நபர் அல்ல Richard என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்