அண்ணனைத் தேடி வந்த தங்கை... தலையும் காலும் இல்லாமல் கிடந்த உடல்: அதிரவைக்கும் சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

இந்திய வம்சாவளியினரான ஒரு இளம் தொழிலதிபரிடமிருந்து தகவல் எதுவும் இல்லாததால் அவரைத் தேடி அவரது தங்கை அவரது வீட்டுக்கு வந்தபோது அவர் கண்ட காட்சி அவரை அலறியடித்து ஓடச் செய்தது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், சவுதி அரேபியாவில் வாழ்ந்து பின் நியூயார்க்கில் வந்து செட்டில் ஆகியுள்ளது.

அந்த குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு, ஃபஹிம் சாலே. சொந்தக்காலில் நின்று உழைத்து 33 வயதில் கோடீஸ்வரராகிவிட்ட சாலே, எப்போதுமே குடும்ப செண்டிமெண்ட் கொண்டவர்.

சமூக ஊடகங்களில் அவர் வெளியிடும் படங்களில் எப்போதும் அவரது தங்கைகள்தான் உடன் இருப்பார்கள்.

சென்ற ஆண்டு தனியாக 2 மில்லியன் டொலர்களுக்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கியிருக்கிறார் சாலே.

இந்நிலையில், திடீரென அண்ணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு எதுவும் வராததால், அண்ணனைத் தேடி அவரது வீட்டுக்கு வந்திருக்கிறார் அவரது தங்கை ஒருவர்.

ஏழவது தளத்திலிருந்த வீட்டுக்குள் நுழைந்த அவரது தங்கை, வீட்டுக்குள் தனது அண்ணனின் உடல், தலையும் கை கால்களும் வெட்டப்பட்டு முண்டமாக கிடப்பதைக் கண்டு பயந்து அலறியபடி படிகளில் இறங்கி ஓடியிருக்கிறார்.

பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த பொலிசார், சாலேயின் உடல் மின்சார ரம்பம் ஒன்றால் அறுக்கப்பட்டிருப்பதையும், அந்த ரம்பம் இன்னும் பிளக்கிலேயே இணைக்கப்பட்டிருப்பதையும் கண்டுள்ளனர்.

அத்துடன், உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், வீட்டில் இரத்தத்தை பெரிய அளவில் பார்க்கமுடியவில்லையாம். ஆக, புரபஷனல் கொலைகாரன் ஒருவன்தான் இந்த கொலையை செய்திருக்கவேண்டும் என பொலிசார் கருதுகிறார்கள்.

அத்துடன் அந்த உடல் பாகங்கள் பல பிளாஸ்டிக் கவர்களில் கட்டி வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

வீட்டின் பின்புறக்கதவும் திறந்திருக்க, கொலைகாரன் சாலேயின் உடல் பாகங்களை வெட்டிக்கொண்டிருக்கும்போது, அவரது தங்கை வரும் சத்தம் கேட்டு, அவன் பின் புற வாசல் வழியாக தப்பியிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், அந்த கட்டிடத்தில் இருந்த CCTV காட்சிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.

அந்த காட்சிகளில், தொப்பி, மாஸ்க் மற்றும் கையுறை அணிந்த ஒருவர், கையில் சூட்கேசுடன், சாலேயை பின் தொடர்ந்து லிப்டில் நுழைவது தெரிகிறதாம்.

அந்த நபர், சாலே இறங்கும் அதே தளத்தில் இறங்க, இவர் ஏன் நம் வீட்டருகே இறங்குகிறார் என சாலே குழம்பி நிற்கும் நேரத்தில் அங்கேயே சாலேயை தாக்கியிருக்கிறார் அந்த நபர்.

கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், பொலிசார் குற்றவாளியைத் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நியூயார்க்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்