கொரோனா நோய்த்தொற்று காரணமாக இணையதளம் மூலம் மட்டுமே பாடங்கள் பயிலும் வெளிநாட்டு மாணவா்கள், அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்ப பெற்றுள்ளது.
கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன, இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்து ஒரு வகுப்புக்கு கூட செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் கற்கும் மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற டிரம்ப் அரசு உத்தரவிட்டது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக ஹாா்வா்டு பல்கலைக்கழம், மாஸசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் உள்பட பல்வேறு கல்வி அமைப்புகள், கூகுள், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மாஸசூசெட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தன.
இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவர்களை வெளியேற்ற தடை விதித்தது, தொடர்ந்து உத்தரவை திரும்ப பெறுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.