அமெரிக்காவில் மனைவியை படுக்கை போர்வையால் கட்டுபோட்டு ஏடிஎம்முக்கு இழுத்து சென்ற கணவன் அவருக்கு சொந்தமான பணத்தை திருடி சென்றுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் பொலிசாருக்கு பெண் ஒருவர் ஏடிஎம் அருகில் தனியாக தவிப்பதாக தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் போர்வையால் கட்டிபோடப்பட்டிருந்த அப்பெண்ணை விடுவித்து விசாரித்தனர்.
அவர் கூறுகையில், வீட்டில் என் கணவருடன் இருந்தபோது படுக்கை போர்வை மற்றும் ஒயரால் என்னை கட்டிய கணவர் காரில் என்னை ஏடிஎம்முக்கு அழைத்து சென்றார்.
பின்னர் அதிகளவில் பணத்தை எடுத்து தருமாறு என்னிடம் கேட்டார்.
நான் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் என்னை மிரட்டி என்னுடைய ஏராளமான பணத்தை எடுத்து விட்டு தப்பியோடிவிட்டார் என கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டு அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.