துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொல்லப்பட்ட தொழிலதிபர் விவகாரம்... முக்கிய நபரை அடையாளம் கண்டுள்ள பொலிசார்?

Report Print Balamanuvelan in அமெரிக்கா
482Shares

அமெரிக்காவில் இளம் தொழிலதிபர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கோரமாக கொல்லப்பட்ட வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மான்ஹாட்டனில் வசித்துவந்த இளம் தொழிலதிபர் ஃபஹிம் சாலே, அவரது வீட்டில் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கிடந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை நியூயார்க் பொலிசார் நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நபர் சாலேவிடம் வேலை செய்ததாகவும், அவர்களுக்கிடையிலான பிஸினஸ் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர் பொலிசார்.

அந்த நபர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், ஆனால் அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

வழக்கின் முக்கியத்துவம் கருதி பொலிசார் அவரது பெயரை வெளியிடவில்லை.’ இதற்கிடையில் சாலேவின் உடற்கூறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அதில், சாலே முதலில் டேசர் எனப்படும் stun gun மூலம் மின்சார ஷாக் கொடுத்து தாக்கப்பட்டுள்ளார்.

கீழே விழுந்த சாலேவை, அவர் சாகும் வரை பல முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான் கொலைகாரன்.

சாலேவும் அந்த மர்ம நபரும் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும், சாலே தாக்கப்பட்டு கீழே விழும் காட்சியும் லிப்டில் உள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நேர்த்தியான மருத்துவரைப்போல, இறந்த சாலேவின் உடலிலிருந்து தலை மற்றும் கைகால்களை அகற்றியுள்ளான் அந்த கொலைகாரன்.

அந்த வீட்டுக்குள் குப்பை போட பயன்படுத்தப்படும் கவர்களும், சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனங்களும், மின்சார ரம்பம் ஒன்றும் கிடைத்துள்ளன.

இதற்கிடையில், இந்த கொலையில் தொடர்புடைய நபர் வெளிநாட்டவராக இருக்கலாம் என்றும், இந்நேரத்திற்கு அவர் விமானம் ஏறி தப்பியிருக்கலாம் என்றும் சாலேவின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிசாரும் அதை ஒப்புக்கொள்கிறார்கள். வழக்கு தீவிரமடைந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்