பெண்ணின் நிலையை அறிய அவர் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள்! அங்குள்ள தொட்டியை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in அமெரிக்கா
5477Shares

அமெரிக்காவில் தாயார் மூலம் கிடைக்கும் சலுகை பணத்துக்காக அவர் சடலத்தை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Marinette கவுண்டியை சேர்ந்தவர் Ruby (89). இவர் மகள் Paula Bergold (61).

Ruby-க்கு சமூக பாதுகாப்பு சலுகை பணம், ஈவுத்தொகை மாதா மாதம் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் Ruby தற்போது எப்படியிருக்கிறார் என்பதை அறிய அதிகாரிகள் அவர் வீட்டுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி வருகை தந்தனர்.

அப்போது Ruby வீட்டில் இல்லாத நிலையில் அவர் மகள் Paula மட்டும் இருந்தார்.

தாயார் குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது அவர்களுக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சியடைய வைத்தது.

அதாவது Ruby இறந்துவிட்டார் எனவும் அவரின் சடலத்தை கீழ்தளத்தில் உள்ள தொட்டியில் மறைத்து வைத்துள்ளதாகவும் Paula கூறினார். இதையடுத்து தொட்டியை திறந்து அதில் Rubyன் சடலம் இருப்பதை கண்டு பொலிசார் அதிர்ந்தனர்.

இதன்பின்னர் Paula-வை பொலிசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், என் தாயாரை நான் கொலை செய்யவில்லை, அவராகவே நாற்காலியில் உட்கார்ந்திருந்த போது இறந்துவிட்டார்.

முதலில் இது குறித்து தகவல் தெரிவிக்கவே நினைத்தேன், ஆனால் என் தாயாரின் சமூக பாதுகாப்பு சலுகை பணம், ஈவுத்தொகை மூலம் தான் நான் வாழ்க்கையை நடத்தி வந்தேன்.

அவர் இறந்தது தெரிந்தால் அந்த பணம் இனி கிடைக்காது என்பதால் மரணத்தை மறைத்துவிட்டேன் என கூறி அதிரவைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட Paula மீது நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

தற்போது சிறையில் உள்ள அவருக்கான தண்டனை விபரம் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்