சீனாவில் இருந்து வந்த பார்சலில் இருந்த பொருள்! அதிர்ச்சியில் அமெரிக்கா: மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Santhan in அமெரிக்கா
5318Shares

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த பார்சலில் சம்பந்தமே இல்லாமல் விதைகள் இருப்பதால், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் உயிர் போயுள்ளது.

இன்னும் இந்த நோயின் தாக்கம் ஒரு சில நாடுகளில் தீவிரமாகி தான் வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் இருந்து தான் அனைத்து நாடுகளுக்கு பரவியது.

ஆனால், சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்திருப்பதாகவும் அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க பொதுமக்களுக்கு அமெரிக்காவின் விவசாயத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், சீனாவிலிருந்து பார்சலில் மர்மமான விதைகள் வந்தால் அந்த விதைகளை யாரும் பயிரிட வேண்டாம் என்றும் அந்த விதைகள் மற்றும் அதன் பேக்கேஜ்களை பத்திரமாக வைத்திருந்து உள்ளூரில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகளிடம் அதை காண்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, சீனா உயிரி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருக்கும் மர்மமான விதைகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்