அமெரிக்காவில் பட்டப்பகலில் சாலையோரத்தில் பெண் செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் மான்ஹாட்டனில் பட்டப்பகலில் பெண் ஒருவர் சாலையோரம் அமர்ந்து போதை ஊசி போட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி, இந்த கொரோனா பரவலின்போது அப்பகுதி எப்படி மாறிப்போனது என்பதை காட்டுகிறது.

ஒரு காலத்தில் பரபரப்பாக காணப்படும் நியூயார்க்கின் முக்கிய பகுதியான மான்ஹாட்டன், பட்டப்பகலில் முரடர் கூட்டங்கள் துப்பாக்கியால் மாறி மாறி சுட்டுக்கொள்ளும் பகுதியாகிவிட்டது.

முன்பெல்லாம் பெடஸ்ட்ரியன் பிளாசா முதலான பகுதிகளில் கோட் சூட் அணிந்தவர்கள் பரபரப்பாக நடமாடுவதைக் காணமுடியும்.

ஆனால், கொரோனா தாக்கிய பிறகு, அப்பகுதிகளிலுள்ள பெரிய பெரிய கட்டிடங்கள் வெறுமையாகிவிட, அது போதைக்கு அடிமையானவர்களும் கேங் உறுப்பினர்களும் கூடும் இடமாகி, அங்கு போதை மருந்து போட பயன்படுத்தும் ஊசிகள் நிறைந்திருப்பதாக சொல்கிறார்கள் அப்பகுதியில் வேலை செய்பவர்கள்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்று, அப்பகுதியில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் பட்டப்பகலில் போதை ஊசி போட்டுக்கொள்வதை காட்டுகிறது.

பொலிசாரும் அப்பகுதியை கண்டுகொள்வதில்லை என கூறப்படும் நிலையில், பொலிசாரோ, இதுவரை தங்களுக்கு ஒரே ஒரு போதைப்பொருள் தொடர்பான புகார் மட்டுமே வந்த்தாகவும், தாங்கள் அங்கு செல்லும் முன் சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்