வெளிநாட்டில் மனைவியை கணவன் கொடூரமாக குத்தில் கொலை செய்த சம்பவம்! தெரியவந்த முக்கிய காரணம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் மனைவியை கணவன் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தி, மனைவி மீது கணவன் பொறமைப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின், Monippally-ஐ சேர்ந்தவர் Merin Joy.

26 வயதான இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் இருக்கும் Broward Health Coral Springs மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த போது, இவரின் கணவர் Philip Mathew திடீரென்று கத்தியால் பல முறை குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

onmanorama

மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடிய Philip Mathew-வை பொலிசார் அடுத்த சில மணி நேரங்களுக்குள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த தம்பதி 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 வயதில் மகள் உள்ளார். இருப்பினும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், இந்த கொலைக்கு முக்கிய காரணம் Philip Mathew மனைவி Merin Joy மீது பொறமை பட்டுள்ளார்.

onmanorama

ஏனெனில், அமெரிக்காவில், Philip Mathew-வுக்கு நல்ல வேலை இல்லை. ஆனால் அவரது மனைவிக்கு நல்ல வேலையும் சமூகத்தில் உயர் நற்பெயரும் இருந்தது. இது இருவருக்குள் பிரச்சனையாக இருந்துள்ளது.

இதனால் பிலிப் மனைவி மீது பொறமை பட்டு, அடிக்கடி அவரை அடிக்க ஆரம்பித்துள்ளார். அதுவே அவர்கள் இருவரும் தனித்தனியாக வாழும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

மேலும், Merin Joy தாயார், தன்னுடைய மகள் திருமண வாழ்க்கையில் மிகவும் அவதிப்பட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், என் மகளை பிலிப் துன்புறுத்துவதை நானே கண்டிருக்கிறேன்.

onmanorama

அவரின் நடவடிக்கை எல்லாமே முரட்டுத்தனமாக இருந்தது. அவர் அமெரிக்காவில் மகளை அடித்ததன் காரணமாக புகார் கொடுக்கப்பட்டது.

அதன் பின் பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சாக்ஸில் கத்தி இருப்பதைக் கண்டனர், ஆனால் அப்போதே அந்த வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டது.

வாழ்க்கையை சுமூகமாக கொண்டு செல்ல என் மகள் எவ்வளவோ முயற்சித்தாள். என்னுடைய மகள், பேத்தி நோரா மற்றும் பிலிப் கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் திகதி 2019-ஆம் ஆண்டு கேரளா வந்தனர்.

கணவர் பிலிப்பின் வீட்டில் இருந்த போது, என்னுடைய மகளை அடித்துள்ளார். இதனால் கிறிஸ்துமஸ் தினமான அன்று பொலிசில் புகார் அளித்தோம். அதன் பின் அந்த வழக்கும் தீர்க்கப்பட்டது.

onmanorama

இருப்பினும் மகள் விவகாரத்து பெற முடிவு செய்து இங்கிருக்கும் குடும்ப நீதிமன்றத்தை அணுகினார். இவர்கள் ஜனவரி மாதம் 12-ஆம் திகதி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், பிலிப் புத்தாண்டிலே சென்றுவிட்டார். என் மகளும் இங்கிருந்தால், வேலையை இழக்க நேரிடும் என்ற பயத்தில், பேத்தி நோராவை தன்னிடம் விட்டுவிட்டு அமெரிக்கா பறந்தாள்.

அமெரிக்கா திரும்பிய பிறகு, மெரின் தனியாக வசித்து வந்தார். அவள் உறவினர்கள் சிலர் தங்கியிருந்த தம்பாவுக்கு தன்னுடைய வேலையை மாற்ற முயன்றாள்.

இதனால், தற்போது வேலை செய்து வந்த மருத்துவமனையில் வேலையை அவள் ராஜினாமா செய்திருந்தாள். அதன் படி மருத்துவமனையில் தனது கடைசி ஷிப்டை முடித்துவிட்டு, செவ்வாய்க்கிழமை (அமெரிக்க உள்ளூர் நேரம்) காலை 8.30 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, ​​பிலிப் கொடூரமாக தாக்கியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

பிலிப் அடிக்கடி தனது வேலைகளை மாற்றிக்கொண்டதாக மெரின் உறவினர் கூறினார். அவர்களது திருமணத்தின் போது, ​​அவர் சிகாகோவில் பணிபுரிந்தார். பின்னர் அவர் மியாமிக்குச் சென்றார், ஆனால் மீண்டும் வேறொரு இடத்தில் வேலை செய்து வந்தார்.

ஆனால், மனைவி தொடர்ந்து வேலை செய்து வந்தால், அவர் மீது பொறமை பட்டுள்ளார். இருப்பினும் பிலிப் பொலிசாருக்கு என்ன வாக்குமூலம் அளிக்கிறார் என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்