மனைவியை அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்ட கணவன்: முகம் முழுவதும் சிதைந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட புதிய முகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு முதல் முக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் உலகின் கவனம் ஈர்த்த பெண் மரணமடைந்தார்.

ஒஹையோவில் 2004ஆம் ஆண்டு தன் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்வதற்காக Connie Culpஐ எட்டு அடி தூரத்திலிருந்து துப்பாக்கியால் சுட்டார் அவரது கணவர் Tom Culp.

அழகிய இளம்பெண்ணான Connieயின் முகத்தில் குண்டு பாய்ந்ததில், அவரது மூக்கு, கன்னங்கள் வாயின் மேல்பகுதி மற்றும் ஒரு கண் ஆகியவை முற்றிலும் சிதைந்துபோயின. அவரது நெற்றி, நாடி, கண்ணிமைகள் மற்றும் கீழ் உதடு ஆகியவை மட்டுமே சேதமடையாமல் மிஞ்சின.

கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார் Tom.

இதற்கிடையில், Connieயின் முகத்தில் 30 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, கடைசியாக 2008ஆம் ஆண்டு அவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முன்பிருந்த அழகிய முகத்துக்கும் புதிய முகத்துக்கும் சம்பந்தமேயில்லை என்றாலும், அந்த முகத்துடன் 57 வயது வரை வாழ்ந்துள்ளார் Connie.

இதுவரை உலகிலேயே முகமாற்று அறுவை சிகிச்சை செய்தபின் இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்த முதல் நபர் Connieதான்.

இந்நிலையில், Connie நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவர் எதனால் உயிரிழந்தார் என்னும் விடயம் வெளியிடப்படவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்