பாலியல் அடிமையாக பயிற்சி தரப்பட்டது: எப்ஸ்டீன் வழக்கில் முக்கிய பெண்மணி மீது கடும் குற்றச்சாட்டு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதாகி, சிறையில் வைத்து மரணமடைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனின் முன்னாள் கூட்டாளி மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

குறித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில் Virginia Giuffre என்பவரின் வாக்குமூலம் தற்போது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

இந்த ஆவணங்கள் மொத்தமும் ஜேர்மன் பத்திரிகை ஒன்றிடம் உள்ளது. அதில் எப்ஸ்டீனின் முன்னாள் கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீது தற்போது சட்டத்தரணியாக பணியாற்றும் வர்ஜீனியா கியுஃப்ரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன்,

பல முக்கிய தகவல்களையும் அம்பலப்படுத்தியுள்ளார். இதில் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த ஆவணங்களில், மேக்ஸ்வெல் வயது குறைவான பெண்களுடன் அல்லது சிறுமிகளுடன் உறவு கொண்டதாக கியுஃப்ரே குற்றம் சாட்டியுள்ளார்.

பல சிறுமிகள் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறும் கியுஃப்ரே, அவர்களின் பெயர்கள் தமக்கு நினைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேக்ஸ்வெல் தான் என்னை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தார் என குறிப்பிடும் கியுஃப்ரே, இந்த விவகாரத்தில் அவர் தான் என்னை ஈடுபடுத்தினார்,

என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார், ஒரு பாலியல் அடிமையாக இருக்க என்னைப் பயிற்றுவித்தார், என்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்தார் என்கிறார் கியுஃப்ரே.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது அமெரிக்காவில் விசாரணையை எதிர்கொள்ளும் மேக்ஸ்வெல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

58 வயதான மேக்ஸ்வெல் ஜூலை தொடக்கத்தில் நியூ ஹாம்ப்ஷயரில் கைது செய்யப்பட்டார். சிறார்களை சட்டவிரோத உறவில் ஈடுபடுத்துவது மற்றும் மோசடி செய்வது உட்பட ஆறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்