அமெரிக்காவில் பயணிகள் இருவர் மாஸ்க் அணிய மறுத்ததால் நடுவழியிலேயே விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எனவே விமான நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றன.
மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது வரை பல்வேறு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி வருகிறது டெல்டா விமான நிறுவனம்.
இந்நிலையில் இரண்டு பயணிகளால் பாதி வழியில் டெல்டா நிறுவன விமானமொன்று புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்த நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது, அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிட்ரோய்ட் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லான்டா நகருக்கு கடந்த ஒரு டெல்டா விமானம் 23 ஆம் திகதி புறப்பட்டது.
விமானத்தில் பயணித்த இருவர் மாஸ்க் அணிய மாட்டோம் என ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானிகளிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக பாதி வழியிலேயே தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொண்டு மீண்டும் புறப்பட்ட இடமான டிட்ரோய்ட் நகருக்கு வந்தது.
அவர்களை விமான நிலையத்தில் இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் அட்லான்டா நோக்கி புறப்பட்டது விமானம்.