ரஷ்யா மீது சந்தேகம்... சீனாவின் தடுப்பு மருந்து எங்களுக்கு தேவையே இல்லை: அமெரிக்கா திட்டவட்டம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

ரஷ்ய விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி தொடர்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் அந்தோனி ஃபௌசி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் மொத்தம் 17.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

இதில், சிகிச்சை பலனின்றி 680,000 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்தொன்று மிக விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என தகவல் வெளியாகியும் உலக சுகாதார அமைப்போ, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எவையும் கண்டுகொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய மருத்துவ நிபுணரான அந்தோனி ஃபௌசி வெளிப்படையாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய விஞ்ஞானிகள் குழு மனிதர்களிடம் முன்னெடுத்த பரிசோதனை வெற்றி என அறிவித்திருந்தாலும், முதற்கட்ட சோதனையில் வெறும் 40 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

ஆனால் உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி இரண்டாவது கட்டத்தில் 100 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதிக்க வேண்டும், அது மூன்றாம் கட்டத்தில் இந்த எண்ணிக்கை ஆயிரம் தாண்ட வேண்டும். அப்படி என்றால் ரஷ்யாவின் தடுப்பு மருந்தானது தற்போது முதற்கட்டத்தை மட்டுமே கடந்துள்ளதாக தெரியவருகிறது.

மட்டுமின்றி பொதுவாக ஒரு தடுப்பு மருந்து பாதுகாப்பான முறையில் தயாராக நான்கு முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றிருக்கும் நிலையில்,

ரஷ்யாவும் சீனாவும் அதிவிரைவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அந்தோனி ஃபௌசி குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி இந்த இரு நாடுகளின் கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்கா பயன்படுத்தும் வாய்ப்புகள் மிக மிக குறைவே என்றார்.

மேலும், இந்த ஒரு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான முக்கிய தகவல்களை எஞ்சிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொண்டு விவாதிப்பதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்கிறார் ஃபௌசி.

இருப்பினும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்று கண்டிப்பாக 2021 ஆம் ஆண்டு கண்டிப்பாக ஏதேனும் ஒரு நிறுவனம் புழக்கத்திற்கு கொண்டுவர வாய்ப்புள்ளது என தாம் நம்புவதாக அந்தோனி ஃபௌசி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்