திடீரென உயிரிழந்த சிரித்து பேசிய மனைவி! இறுதிச்சடங்குக்கு கூட பணமில்லாமல் தவித்த கணவன்.. அடுத்து நடந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் மனைவி திடீரென உயிரிழந்த நிலையில் இறுதிச்சடங்கு செலவுக்கு கூட பணமில்லாமல் தவித்த கணவனுக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவி அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெக்ஸாஸை சேர்ந்தவர் Frank Garcia. இவர் மனைவி Eugenia Lynn Singleton.

கடந்த மாதம் 14ஆம் திகதி காலையில் தூங்கி எழுந்த Eugenia கணவருடன் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தார், அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதை பார்த்து பதறிய Frank அவசர உதவி எண்ணுக்கு போன் செய்தார், உடனடியாக அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் Eugenia-ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் Frank அதிர்ச்சியடைந்தார், அதே நேரம் அடுத்தக்கட்டமாக மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்ய அவரிடம் பணம் இல்லை.

இதனால் செய்வதறியாமல் தவித்த Frank ஓன்லைன் மூலம் பணம் வசூல் செய்ய தொடங்கினார்.

அவரின் நிலையை அறிந்து தங்கள் பெயரை கூட சொல்ல விரும்பாத சிலர் உடனடியாக ஆச்சரியம் அளிக்கும் வகையில் $5,000 பணம் கொடுத்து உதவினார்கள்.

இதன்பின்னர் மனைவிக்கு Frank இறுதிச்சடங்கு செய்தார்.

அவர் கூறுகையில், என் மனைவியை இழந்து கடினமான நிலையில் இருந்த போது தேவதைகள் என் பக்கம் வந்து உதவினார்கள் என்றே சொல்வேன்.

ஆம்! நான் எதிர்பார்க்காத வகையில் உடனடியாக எனக்கு பணம் கிடைத்தது.

இதன் மூலம் நம்மை சுற்றி உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

அதாவது உதவி தேவைப்படும் முக்கியமான நேரத்தில் நமக்கு உதவும் தேவதூதர்கள் இன்னும் இருக்கிறார்கள், எனக்கு உதவியவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்