எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவிப்பு

Report Print Fathima Fathima in அமெரிக்கா
53Shares

ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது.

இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கு என்று முழங்கி வரும் அதிபர் டிரம்ப், எச் 1 பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதனால், எச் 1 பி விசாதாரர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

அதாவது, கடந்த ஜூன் 22ல் எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தளர்வு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம்.

ஏற்கனவே பணியாற்றிய வேலைக்கு திரும்புவதாக இருந்தால் வரலாம், மேலும் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்