நேரலையில் கேட்ட துப்பாக்கி சத்தம்: பிஞ்சு பிள்ளைகளின் முன்னிலையில் ரத்தவெள்ளத்தில் சரிந்த தாயார்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
4515Shares

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தாயார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நேரலையில் பதிவாகியுள்ளது.

புளோரிடாவின் இண்டியான்டவுனில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை 08:00 மணிக்கு குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மேலும் சம்பவத்தின்போது அதே குடியிருப்பில் ஐந்து குழந்தைகளும் சாட்சியாக இருந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது கொல்லப்பட்ட 32 வயது தாயாரின் 10 வயது மகள் வீடியோ அழைப்பு மூலம் இணையம் வழி வகுப்பில் கலந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது சிறுமியின் ஆசிரியருக்கு, ஒரு ஆணும் பெண்ணும் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபடுவது கேட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பேச்சுக்களை தமது மாணாக்கர்கள் கேட்க வேண்டாம் என அவர் சத்தத்தை மட்டும் துண்டித்துள்ளார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் துப்பாகி குண்டு வெடித்ததுடன், குறித்த சிறுமி காதுகளை பொத்திக் கொண்டது ஆசிரியரால் காண முடிந்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய 27 வயது டொனால்டு வில்லியம் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், 32 வயதான மரிபெல் ரோசாடோ மோரலெஸ் என்பவர் தனது நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு இளம் உறவினர்கள் கண் முன்னே கொல்லப்பட்டதாக மார்ட்டின் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பில் கைதாகியுள்ள வில்லியம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது அனாதையாக்கப்பட்ட அந்த நான்கு குழந்தைகளும் மாகாண குழந்தைகள் நல இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்